தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், கட்சியினருடன் கலந்தாலோசிக்காமல் பாஜக-விற்கு ஆதரவு அளித்ததாக கூறி, அக்கட்சியின் கோவை மாவட்ட இளைஞர் அணி தலைவர் அனல் அசார் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.