அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில், திருச்செந்தூர் அருகே நடைபெற்ற INDIA கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எம்.பி. கனிமொழி, சென்ற முறை தாம் தூத்துக்குடியில் போட்டியிட்டபோது, வெற்றி பெற்ற பிறகு அங்கு வருவேனா என விமர்சனங்கள் எழுந்ததாகவும், ஆனால் தூத்துக்குடி தமக்கு இரண்டாவது தாய் வீடு போல் மாறிவிட்டதாகவும் தெரிவித்தார்.
நீதிமன்றத்தை நாடி தான் நியாயம் கிடைக்க வேண்டிய நிலைக்கு தமிழகம் இன்று தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.