குமரி மாவட்டத்தில் கனிம வளங்களை வெட்டி எடுத்து லாரிகளில் கேரளாவுக்கு எடுத்துச்செல்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளது அப்பட்டமான பொய் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பா.ஜ.க சார்பில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அவர், நாகர்கோவிலில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது இதை தெரிவித்தார்.