பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் வேலைவாய்ப்பு, சுகாதாரம், கல்வி உள்ளிட்டவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அங்கு தி.மு.க சார்பில் போட்டியிட உள்ள அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு கூறினார்.
குளித்தலை எம்.எல்.ஏ மாணிக்கம் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்திப்பதற்காக சென்ற அவர், பெரம்பலூர் தொகுதிக்கு அளிக்கப்படும் வாக்குறுதிகள் இன்னும் ஓரிரு நாட்களில் தெரிவிக்கப்படும் என்றார்.