திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி ஆழித்தேரோட்டத்தை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, எஸ்.பி. உள்ளிட்டோர் தொடங்கி வைத்த நிலையில், திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இன்று ஒரே நாளில் விநாயகர், முருகன், தியாகராஜர், அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் என ஐந்து தேரோட்டம் நடைபெறுகிறது. நான்கு வீதிகளிலும் பிரம்மாண்டமாக உலா வரும் திருவாரூர் அழித்தேரை, தியாகேசா, தியாகேசா என்ற இறை முழக்கத்துடன் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.
திருவாரூர் ஆழித்தோரோட்டத்தை முன்னிட்டு, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.