தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் அடுத்த மாதம் 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதையடுத்து, நாகர்கோயில் கிடங்கில் இருந்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி வாக்குப்பதிவுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் ஆகியவை மாவட்டத்தில் உள்ள ஆறு தாலுகா அலுவலகங்களுக்கும் தனித்தனியாக பிரித்து அனுப்பிவைக்கப்பட்டன.