நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 16 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி, வட சென்னையில் ராயபுரம் மனோவும் தென் சென்னையில் டாக்டர் ஜெயவர்தனும் போட்டியிடுகின்றனர். காஞ்சிபுரத்தில் ராஜசேகர், அரக்கோணத்தில் ஏ.எல்.விஜயன், கிருஷ்ணகிரியில் ஜெயபிரகாஷ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சேலத்தில் விக்னேஷ், தேனியில் நாராயணசாமி, ஈரோட்டில்ஆற்றல் அசோக்குமார் ஆகியோர் அதிமுக சார்பில் களமிறங்குகின்றனர்.
மதுரையில் டாக்டர் சரவணன், கரூரில் கே.ஆர்.என்.தங்கவேல், ஆரணியில் கஜேந்திரன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சிதம்பரத்தில் சந்திரசேகரனும் நாமக்கலில் தமிழ்மணியும் ராமநாதபுரத்தில் ஜெயபெருமாளும் அதிமுக வேட்பாளர்களாகியுள்ளனர்.
விழுப்புரத்தில் பாக்கியராஜ், நாகப்பட்டினத்தில் சுர்ஜித் சங்கர் ஆகியோர் போட்டியிடுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.