விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில், வழிபாடு செய்வது தொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து மூடப்பட்ட திரவுபதி அம்மன் கோவிலை தினசரி பூஜைகளுக்காக திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
கோவிலுக்குள் பொதுமக்கள் யாரையும் அனுமதிக்கக் கூடாது என்றும், பூஜைகள் செய்ய பூசாரியை நியமிக்கும்படியும் அறநிலையத் துறைக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவையடுத்து, வரும் 22-ஆம் தேதி கோவிலைத் திறக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துவருகிறது.