விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை வந்த பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சால்வை அணிவித்து வரவேற்றார்.
தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸும் பாஜக தலைவர் அண்ணமலை உள்ளிட்டோரை வரவேற்றார்.
இதைத் தொடர்ந்து வீட்டின் வரவேற்பறையில் இரு கட்சிகளின் நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.