திருப்பத்தூர் மாவட்டம், தும்பேரி கூட்டு சாலையில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையின்போது பாலாஜி என்பவர் உரிய ஆவணம் இன்றி தனியார் ஏடிஎம்மில் நிரப்புவதற்காக கொண்டு சென்ற 14 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் நடந்த வாகன தணிக்கையின்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் துணி வியாபாரி கோவிந்தராஜ் என்பவர் காரில் கொண்டு சென்ற 9 லட்சத்து 32 ஆயிரத்து 400 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.