நாங்கள் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என எழுதி ஒவ்வொரு தெருக்களிலும் வைக்க வேண்டும் என மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராமஸ்ரீநிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
ரெட்டியார் நலச்சங்கத்தின் புதிய மாநில நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மதுரை திருமங்கலத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராமஸ்ரீநிவாசன் பங்கேற்று, தேர்தலில் நல்லவருக்கு வாக்களியுங்கள், பணம் வாங்காமல் ஓட்டுப் போடுங்கள் எனத் தெரிவித்தார்.
நாங்கள் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என எழுதி தெருக்களில் வைக்க வேண்டும் என்ற பேராசிரியர், ஓட்டுக்கு பணம் விற்பதை கழுதை, எருமை, பன்றி கதை கூறி விளக்கினார்.
தலையை எண்ணுவது தான் ஜனநாயகத்தின் வேலை, எண்ணிக்கையை வைத்து தான் தெருவில், ஊரில், அரசியலில், நாடாளுமன்றத்தில் மரியாதை கிடைப்பதாகவும் பேராசிரியர் தெரிவித்தார்.