தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டு, அதில் பங்கேற்க வந்த அமைச்சர் காந்தி மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரை தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் மற்றும் பறக்கும் படையினர் வெளியேற்றினர்.
மண்டபத்திற்கு வெளியேயும் சாலை ஓரத்திலும் வைக்கப்பட்ட பேனர்கள் மற்றும் கொடிக்கம்பங்களும் அகற்றப்பட்டன.