சென்னையில் நீதிமன்ற உத்தரவுபடி விடுதியை காலி செய்ய வலியுறுத்தப்பட்டதை எதிர்த்து அங்கு தங்கியிருந்த இளம்பெண்கள் போராட்டம் நடத்தினர்.
முறையான கால அவகாசம் தர வேண்டும், முன்பணத் தொகை ரூபாய் 10 ஆயிரத்தை திருப்பி தர வேண்டும் என கேட்ட நிலையில், விடுதி நிர்வாகம் தரவில்லை எனக்கூறப்படுகிறது. ஆனால், தங்களை விடுதியை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்துவதாக கூறி, விடுதிக்கு வெளியே பெண்கள் போராட்டம் நடத்தினர்.