திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் புதியதாக பாருடன் கூடிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு அப்பகுதி பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து திறக்கப்பட உள்ள கடையை முற்றுகையிட்டனர்.
நெய்க்காரன்பாளையத்தில் இயங்கி வந்த மதுக்கடையை தற்போது மாற்ற உள்ளதாகவும் அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் பள்ளி, வழிபாட்டுத்தலங்கள் உள்ளதாகக் கூறி அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.