மிதமிஞ்சிய மது போதையில் படுத்துக் கொண்டே பற்ற வைத்த சிகரெட் படுக்கையில் விழுந்து தீப் பற்றியது கூட தெரியாமல் மல்லாந்து கிடந்த போதை ஆசாமி, தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திருவள்ளூர் கிழக்கு குளக்கரை தெருவில் வசிக்கும் சேகர், குடும்பத்தார் வெளியே சென்றிருந்த வேளையில் மது குடித்துவிட்டு வீட்டுக்குள் தனியாக படுத்திருந்த போது இச்சம்பவம் நேரிட்டது.
வீட்டிற்குள் இருந்து புகை வருவதை பார்த்து அக்கம் பக்கத்தினர் தகவல் அளித்ததன் பேரில் தீயணைப்புத் துறையினர் கால்களில் தீக்காயம் ஏற்பட்ட சேகரை மீட்டனர்.