ஆந்திராவில் இருந்து காரில் தமிழகத்திற்கு மூட்டை மூட்டையாக கடத்தி வரப்பட்ட 900 கிலோ குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதை பொருட்களுடன் தப்ப முயன்ற காரை நான்கு கிலோ மீட்டர் தூரம் போலீசார் துரத்திச் சென்று பிடித்தனர்.
ஆந்திர தமிழக எல்லை பகுதியான காட்பாடியை அடுத்த கிறிஸ்டியன் பேட்டை சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, வேகமாக வந்த கார் நிற்காமல் சென்றது. அதை போலீசார் துரத்திச் சென்றபோது ஒருகட்டத்தில் காரின் டயர் வெடித்ததால், ஓட்டுநர் தப்பி ஓடினார்.