ஓட்டப்பிடாரம் அருகே கீழமுடிமன் மற்றும் மேலமுடிமன் கிராமங்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீரில் அதிக அளவு சுண்ணாம்பு தன்மை உள்ளதால் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஏற்படுவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் உள்ள குளத்தில் மோட்டார் பொருத்தப்பட்டு குழாய் மூலம் 15 ஆண்டுகளாக குடிநீர் வழங்கப்படுகிறது.
நீரின் சுண்ணாம்பு தன்மை குறித்து ஆய்வில் தெரியவந்ததையடுத்து இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர்.