கல்லூரியில் படித்துக் கொண்டே ஆட்டோ ஓட்டும் தன்னை, சாதாரண பிரச்னைக்காக கைவிலங்கு மாட்டி போலீஸார் அழைத்துச் சென்றதாக மாணவர் தெரிவித்துள்ளார்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான அருண்குமார் ஓட்டிச் சென்ற ஆட்டோ பெரம்பூரில் மற்றொரு ஆட்டோ மீது மோதியது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்ட போது அங்கு சாதாரண உடையில் வந்த காவலர் அண்ணாமலை என்பவர் ஆட்டோவை எடுக்கச் சொல்லியும் கேட்காததால் மாணவரை கைது செய்ததாக கூறப்படுகிறது.
மாணவரை தாக்கி கை விலங்கு பூட்டி அழைத்துச் சென்ற தலைமை காவலர் அண்ணாமலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.