வேலூர் மாவட்டம் பொன்னையில் பேக்கரி கடையில் வாடிக்கையாளரின் செல்போன் மற்றும் மணிபர்சை பெண் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
விஜயா என்ற பெண் பேக்கரியில்தமது பர்சையும் செல்போனையும் மறந்துவிட்டுச் சென்றார்.
திரும்பி வந்து பார்த்த போது பர்சும் செல்போனும் காணவில்லை.
கடையின் சிசிடிவியில் அவற்றை ஒரு பெண் எடுத்துச் சென்ற காட்சி பதிவாகியுள்ளது.