காஞ்சிபுரத்தில், 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைக்கும் பூமிபூஜைக்கு தங்களை அழைக்கவில்லை எனக் கூறி மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துணை மேயர் மற்றும் தி.மு.கவைச் சேர்ந்த மூன்று மண்டல தலைவர்கள் உள்பட 30 கவுன்சிலர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். கொண்டு வரப்பட்ட 21 தீர்மானங்களும் ரத்து செய்யப்படுவதாக மேயர் மகாலட்சுமி யுவராஜ் அறிவித்து கூட்டத்திலிருந்து வெளியேறினார்.