செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அலங்கார பூச்செடிகள், அமரும் பலகைகள், செயற்கை நீர் ஊற்றுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் அமைக்கப்பட்ட புதிய கால நிலை பூங்காவை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
பேருந்து முனையத்தில் இருந்து புதிதாக அமைக்கப்பட உள்ள கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு பயணிகள் எளிதில் செல்லும் வகையிலும், ஜிஎஸ்டி சாலையை பாதுகாப்பாக கடக்கும் வகையிலும் கட்டப்படவுள்ள ஆகாய நடைமேம்பாலப் பணிகளுக்கான பூமி பூஜையிலும் அமைச்சர் பங்கேற்றார்.