சேலம் மாவட்டம் முட்டல் பூமரத்துப்பட்டி மலை கிராமத்துக்கு பேருந்து சேவையை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
பல ஆண்டுகளாக தங்களுக்குப் பேருந்து வசதி இல்லை எனக் கூறி வந்த கிராம மக்கள், தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்த நிலையில், பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.