செங்கல்பட்டு மாவட்டம் ஆப்பூரில் பெண்ணை தீ வைத்துக் கொளுத்திவிட்டு தப்பியோடிய சூர்யபிரகாஷ் என்ற நபர் கைது செய்யப்பட்டான்.
சூர்யபிரகாஷுக்கும் ருக்மணிக்கும் தவறான தொடர்பு இருந்ததாகக் கூறப்படும் நிலையில், ருக்மணியின் 13 வயது மகளிடமும் சூர்யபிரகாஷ் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
ருக்மணி அதனைக் கண்டித்ததால், அவரை சூர்யபிரகாஷ் தாக்கவே, தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு ருக்மணி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அப்போது தீக்குச்சியைக் கொளுத்தி ருக்மணி மீது வீசிவிட்டு சூர்யபிரகாஷ் தப்பியோடிய நிலையில், போலீசார் அவனைக் கைது செய்தனர்.