நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவளிக்க உள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்களின் தேவை என்ன என்பதை பாஜகவிடம் கடிதம் மூலம் கூறியிருப்பதாகத் தெரிவித்தார். மோடி மூன்றாவது முறையும் பிரதமராக ஒரு அணிலைப் போல தாங்கள் உதவி செய்யப்போவதாகவும் டிடிவி தினகரன் கூறினார்.