அயோத்தியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு ஆன்மீக பயணம் வந்த தன்னை பரமக்குடி அருகே ஒரு கும்பல் வழிமறித்து தாக்கியதாக பெண் துறவி புகாரளித்திருந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக,அவர் மீதே போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
புகார் அளித்த துறவி சப்ரா பதக்கிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது ஒரு சி.சி.டி.வி பதிவில் துறவியின் சகோதரர் சாலையில் கிடந்த கற்களை எடுத்து காரில் வைத்ததாகவும், அதுகுறித்து துறவியிடம் கேட்ட போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததாகவும் கூறிய போலீசார், வீண் வதந்தியை பரப்பியதாக துறவி மற்றும் அவருடன் வந்த 2 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த குற்றச்சாட்டை மறுத்த துறவி சப்ரா பதக், தனது யாத்திரைக்கு இடையூறு செய்வோரை ராமர் பார்த்துக் கொள்வார் என்றார்.