சென்னை போரூர் ராமாபுரம் பகுதியில் மின்சாதனங்களை விற்பனை செய்யும் கடையில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமாகின.