தனது தோழமை கட்சிகளுக்கு திமுக எப்போதும் மரியாதை கொடுத்ததில்லை என்றும் பாஜகவை அதிமுக கழற்றிவிட்ட பின்னர் தோழமை கட்சிகள் அதிமுக பக்கம் வந்துவிடுவார்களோ என்ற பயத்தில்தான் தொகுதிப் பங்கீட்டை திமுக இறுதி செய்தது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
கமல்ஹாசனின் டார்ச் லைட்டில் பேட்டரி போய்விட்டது பல்பும் பியூஸாகிவிட்டது என்றும் ஜெயக்குமார் கிண்டலடித்தார்.