சென்னையின் பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டு வந்த சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புடைய மின்னணு சிகரெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ரகசிய தகவலின் பேரில் விசாரணையில் இறங்கிய போலீசார், சேப்பாக்கம், மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரத்து 300 இசிகரெட்டுகளைப் பறிமுதல் செய்து, 6 பேரைக் கைது செய்தனர்.
மலேசியா, இந்தோனேஷியா, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அவற்றை இறக்குமதி செய்தது தெரியவந்தது.