அ.தி.மு.க. ஆட்சியில் மடிக்கணினி, புத்தகப்பையுடன் இருந்த மாணவர்கள் கையில் தற்போது போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கும் நிலையை திமுக அரசு ஏற்படுத்தி இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பூசிவாக்கத்தில் நடைபெற்ற அ.தி.மு.க நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.