எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே சினிமாவில் போதைப் பொருள் புழக்கம் குறித்து எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருவதாக திரைப்பட இயக்குநர் பாரதிராஜா கூறினார்.
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் உள்ள முத்துமலை முருகன் கோவிலில் நாம் தமிழர் கட்சியின் கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளரின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்த பாரதிராஜா, எந்த சின்னம் கொடுத்தாலும் சீமான் வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.