போதை நபரின் நட்பால் பறிபோன சக தொழிலாளியின் உயிர்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மதுகுடிக்க வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டவர் விபத்தில் இறந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் அழைத்துச் சென்ற அவரது நண்பரை தாக்கினர்.
பாலகிருஷ்ணன் என்பவர் போதையில் சக தொழிலாளி பெருமாளின் வீட்டுக்கு சென்று மதுகுடிக்க அழைத்துள்ளார்.
அவர் மறுத்ததால் குடிக்காவிட்டாலும் பரவாயில்லை கம்பெனி கொடு என்று இருசக்க வாகனத்தில் அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் பெருமாள் உயிரிழந்தார்.
போதை நபரின் நட்பால் கணவரின் உயிர் பறிபோனதை அறிந்த பெருமாளின் மனைவி, வீடு தேடி வந்தவன் எமனாக இருந்துவிட்டான் என்று கதறி அழுதார்.
பெருமாளின் உறவினர்கள் ஆத்திரத்தில் பாலகிருஷ்ணனை தாக்கியதை அடுத்து அவரை போலீசார் மீட்டு விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.