கடலூர் அருகே உள்ள சின்ன கங்கணங்குப்பம் பகுதியை சேர்ந்த வினோத் என்பவரது வீட்டின் மர ஷோபாவில், குஷன் இருக்கைக்கு அடியில் பதுங்கியிருந்த நாகப்பாம்புவை, பாம்பு பிடி வீரர் செல்லா லாவகமாக பிடித்தார்.
வெயில் காலம் துவங்கி விட்டதால் பாம்புகள் இருப்பதற்கு இடமின்றியும், அதிக உஷ்ணம் காரணமாகவும், குடியிருப்பு பகுதிகளை நோக்கி வர துவங்கும் என்பதால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என பாம்பு பிடி வீரர் செல்லா கேட்டுக்கொண்டுள்ளார்.