நெல்லையில் கடன் வாங்கியவர் உயிரிழந்த பின்னரும், உரிய காப்பீட்டு தொகையை அளிக்கவில்லை என தொடுக்கப்பட்ட வழக்கில், 9 சதவீத வட்டியுடன் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட குடும்பத்தை அலைக்கழித்ததிற்காக ஒரு லட்சம் அபராதம் செலுத்தவேண்டும் என்றும் ஸ்ரீராம் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ராஜேந்திரன் என்பவர் ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தில் 17 லட்சம் ரூபாய் வீடுக்கடன் பெற்றதுடன், அதிகாரிகளின் அறிவுரையின் படி, அதற்காக 48 ஆயிரம் ரூபாயில் ஸ்ரீராம் இன்சூரன்ஸ் காப்பீடு நிறுவனத்தில் உரிய காப்பீட்டையும் செய்துள்ளார்.
ராஜேந்திரன் உயிரிழந்த நிலையில், காப்பீட்டுத் தொகையான 14 லட்சத்து 69 ஆயிரத்து 487 ரூபாயை ஸ்ரீராம் இன்சூரன்ஸ் நிறுவனம், ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு வழங்காமல், தங்களுக்கும், அந்த நிறுவனத்திற்கும் தொடர்பில்லை எனக்கூறி அலைகழித்ததையடுத்து அவரது மனைவி ஜானகி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.