நாகை ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு சுய உதவி குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருள்களின் கண்காட்சி மற்றும் விற்பனையை ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டார்.
விலையில்லா நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை இயக்கி வைத்த அவர், பெண்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தையும் தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கரகாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற இருசக்கர வாகன பேரணியும் நடைபெற்றன.