மகா சிவராத்திரி திருவிழாவையொட்டி ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள், கடற்கரை மணலில் சிவலிங்கம் பிடித்து தரிசனம் செய்தனர்.
கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்ட பக்தர்கள் ராமநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள 21 புண்ணிய தீர்த்த கிணறுகளில் புனித நீராடி கோயிலுக்குள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.