சிவகாசியில் பள்ளிகளில் படிப்பை பாதியில் விட்ட மாணவர்களை வீடு வீடாக சென்று சந்தித்து, இடைநிற்றலுக்கான காரணங்கள், குறைகள் குறித்து இரண்டாவது கட்டமாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கேட்டறிந்தார்.
பள்ளி கல்வியில் சிறப்பான தேர்ச்சி சதவீதமுடைய விருதுநகர் மாவட்டத்தை, இடைநிற்றல் இல்லா மாவட்டமாக மாற்ற முழு ஒத்துழைப்பு தருமாறு பெற்றோர்களை ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.