காலையில் நடைபெறும் என அறிவித்திருந்த இராஜபாளையம் நகராட்சி கூட்டத்தை மாலையில் நடத்தியதால் தலைவரிடம் அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சரோடு சேர்ந்து பங்கேற்றதால் கூட்டம் திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை என நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் அளித்த விளக்கத்தை கவுன்சிலர்கள் ஏற்க மறுத்தனர்.