சேலத்தில் சாலையில் மயங்கி விழுந்த காவல் உதவி ஆய்வாளரை பாமக எம்எல்ஏ அருள் முதலுதவி செய்து காப்பாற்ற முயன்றார்.
அன்னதானப்பட்டியைச் சேர்ந்த பாபு சேலம் மாநகர ஆயுதப் படையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
நேற்று மாலை காரில் சென்ற பாபு திடீரென மயங்கியதால், அவரது கார் லாரி ஒன்றில் மோதி நின்றுவிட்டது.
அப்போது அந்த வழியாக சென்ற சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள், காரில் பாபு மயங்கிக் கிடப்பதை அறிந்து முதலுதவி சிகிச்சை அளித்து, வேறு ஒரு காரில் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பாபு உயிரிழந்தார்.