ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி, திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயஸ், முருகன், ஜெயக்குமார் ஆகியோரை அவர்கள் விரும்பும் தேசங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏற்கனவே 32 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின் வெளியே வந்தவர்கள்,உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்யக் கூட அனுமதிக்கப்படாமல் தனிமைச் சிறை போல இந்த சிறப்பு முகாம் எனும் கொடூரத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்றும் சாந்தனை காலத்தோடு வெளிநாடு செல்ல அனுமதி பெற்றுத் தராததால், தனது குடும்பத்தோடு வாழ முடியாமல்தான் அவர் மரணமடைந்துள்ளார் என்றும் இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
சிறப்பு முகாமில் அடைக்கப்படுதன் நோக்கமே அவர்களை வெளிநாடு அனுப்ப வேண்டும் என்பதுதான் என்றும் ஆனால் இன்றைய நாள் வரை அதுகுறித்து எந்தவித முடிவும் அரசு எடுத்ததாகத் தெரியவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.