கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, போத்தராவுத்தன்பட்டி ஊராட்சி செயலாளர் லட்சுமணன் ஓய்வு பெற இருந்த நிலையில், அதற்கு முதல் நாளே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஊராட்சி நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவரை மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்தார்.
லட்சுமணன், கள்ளபள்ளி ஊராட்சியில் செயலாளராக இருந்தபோது, ஜல்ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கு, இணைப்பு ஒன்றுக்கு கூடுதலாக 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்து, போலி ரசீது வழங்கியது உள்ளிட்ட பல்வேறு புகார்களில் அவர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.