கன்னியாகுமரி மாவட்டம் குருத்தங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பாலின வள மையம் மற்றும் குடும்ப நல ஆலோசனை மையத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்.
சமூக நலத்துறை சார்பில் நியமிக்கப்பட்ட ஆலோசகரிடம் என்ன படித்தீர்கள், எப்படி ஆலோசனை வழங்குவீர்கள் என அமைச்சர் கேள்விகளை எழுப்பினார்.
அவர் பயிற்சி பெறாதது தெரிய வந்த நிலையில் பெங்களூரில் உள்ள அரசு அங்கீகரித்த மையத்தில் பயிற்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.