சென்னை, பெருங்குடி அருகே கல்லுக்குட்டை பகுதியில் ஒரு கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒன்றே முக்கால் கிலோ மீட்டர் தொலைவிற்கு தார் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
பிறகு செய்தியாளரை சந்தித்த அமைச்சர், சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை, மின்சாரம், குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்பட்ட இப்பகுதி மக்களின் தேவைகள் இப்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.