கடலூர் மாவட்டம் வெங்கடாம்பேட்டை, ஆயிப்பேட்டை, கன்னித்தமிழ்நாடு, கோ.சத்திரம், சிவநந்திபுரம், மதனகோபாலபுரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் பயிரிடப்பட்ட நிலக்கடலை அறுவடை செய்யப்பட்டு குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வரத் தொடங்கியுள்ளன.
80 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை, 8 ஆயிரத்தில் இருந்து ஒன்பதாயிரத்து ஐநூறு ரூபாய் வரை விலை போனதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.