கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலில் ஒதுக்கப்பட்டதை போலவே, எதிர்வரும் மக்களவை தேர்தலிலும் தி.மு.க கூட்டணியில் சி.பி.ஐ மற்றும் சி.பி.எம்.முக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதற்கான உடன்பாடு சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநில செயலாளர்களிடையே கையெழுத்தானது.
போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது இன்னும் முடிவாகவில்லை என இரு கட்சியினரும் தெரிவித்தனர்.