பண்ருட்டியில் முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வத்தின் வீடு உள்ளிட்ட 6 இடங்களில் நடந்த சோதனையில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
2011 முதல் 2016 வரை நகர்மன்ற தலைவராக இருந்த சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம், பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகன நிறுத்துமிடத்தை ஒதுக்குவதற்கான டெண்டரில் 20 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக பண்ருட்டி மற்றும் சென்னையில் உள்ள அப்போதைய நகராட்சி கமிஷனர் பெருமாள் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.