சென்னையில் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 2.0வை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றுத் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியையும் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், காலநிலை மாற்றத்தை சிறப்பாக கையாளும் மாநிலமாக தமிழ்நாடு உருவாக அனைவரும் ஓர் அணியில் நின்று உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.