காலி பணியிடம் நிரப்புதல், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழகத்தில் 2வது நாளாக வருவாய்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
10 மாதங்களுக்கு முன்னதாக 3 அமைச்சர்கள் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளின்படி அரசாணை வெளியிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
கரூர், ராணிப்பேட்டை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற போராட்டம் காரணமாக அலுவலகங்கள் வெறிச்சோடின.