திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் சுமார் பத்து ஆண்டுகளாக ஒரே இடத்தில் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அதை தினந்தோறும் எரிப்பதால் சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தலக்காஞ்சேரி சாலையில் உள்ள இவேலி அகரம் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருதால் துர்நாற்றம் வீசி தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.