தூத்துக்குடியில் பிரதமர் நரேந்திர மோடி
ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர்
தேசிய கீதம், தமிழ் தாய் வாழ்த்துடன் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சி தொடக்கம்
தூத்துக்குடி விழாவில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு வெள்ளி செங்கோல் வழங்கப்பட்டது
இந்தியில் மோடி என்றால் முத்து என்றும் அர்த்தம்; அப்படி முத்துக்குளிக்கும் நகருக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை - எல்.முருகன்
எப்போதெல்லாம் தமிழ்நாட்டிற்கு பிரதமர் வருகிறாரோ, அப்போதெல்லாம் பல்லாயிரம் கோடி ரூபாய் திட்டங்களை தந்து வருகிறார் - எல்.முருகன்
கடந்த 10 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு தந்திருக்கிறார் - எல்.முருகன்
2047ஆம் ஆண்டில் உலக வல்லரசாக இந்தியா மாற வேண்டும் என்ற இலக்கோடு பிரதமர் பாடுபடுகிறார் - எல்.முருகன்
மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் உரை
காலை வணக்கம் என தமிழில் கூறி, மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் உரை
துறைமுக விரிவாக்கம் உட்பட ரூ.17,300 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார் - சர்பானந்தா
தமிழ்நாட்டில் 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 துறைமுகங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன - சர்பானந்தா சோனாவால்
சாகர்மாலா திட்டத்தின் ரூ.93,000 கோடி மதிப்பீட்டில் கடல்சார் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன - சர்பானந்தா சோனாவால்