திட்ட அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகள் மேற்கொண்டதாக எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு 25 லட்சம் ரூபாயும், கடமை தவறிய சென்னை மாநகராட்சி,சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு 12 லட்சம் ரூபாயும் அபராதம் விதித்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், லஞ்சம் பெற்று கொண்டு அதிகாரிகள் அனுமதி வழங்குவதாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆழ்வார்பேட்டையில் உள்ள செயின்ட் மேரீஸ் சாலையில் 10 அடுக்கு மாடியாக கட்டப்பட்டுவரும் எம்.ஜி.எம் மருத்துவமனை கட்டுமான பணியால், அதிக அளவில் ஒலி மாசு ஏற்படுவதாக வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சாதாரண மக்கள் சிறிய வீடு கட்ட வேண்டும் என்றால் கூட அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகக் கூறிய நீதிபதிகள் சமுதாயத்தில் பணபலம் மற்றும் அதிகாரம் உள்ளவர்கள் தான் வாழ முடிவதாக அதிருப்தி தெரிவித்தனர்.
அபராத தொகை 37 லட்ச ரூபாயை அடையார் புற்றுநோய் மையத்திற்கு செலுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், எம்.ஜி.எம் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் குறித்து, சி.எம்.டி.ஏ. சென்னை மாநகராட்சி, மாசு கட்டுபாட்டு வாரியம் ஆகியவை 15 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய ஆணைபிறப்பித்து வழக்கை முடித்துவைத்தனர்.